by aadhavan on | 2026-05-30 08:16 PM
» மு. ஆதவன்
பிள்ளைமார், முதலியார் வரன்களுக்கான இலவச மணமாலை நிகழ்ச்சி, மதுரையில் நாளை ஞாயிற்றுக் கிழமை (மே.31) நடக்கிறது.
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), பாண்டிய மண்டலம் - மதுரை மாவட்டம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை தல்லாகுளம், லட்சுமிசுந்தரம் ஹாலில் காலை 8 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
இம்பா நிறுவன தலைவர் அருணாசலம் முதலியார், எய்ம்பா நிறுவன தலைவர் ஓம்சக்தி ஆர்.ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.கே. ரகுராம், பொருளாளர் எம்.ரவி முதலியார், துணைத்தலைவர் டி. ராமச்சந்திர குமார் தலைமை வகிக்கின்றனர்.
செங்குந்தர் மஹா ஜன சங்கம். கே.பி.கே.செல்வராஜ், தமிழ்நாடு சைவ வேளாளர்கள் சங்கம் பண்ணை சிவா, சேனைத் தலைவர் மஹாஜன சங்கம் மாரிமுத்து, ஆறுநாட்டு வெள்ளாளர் சங்கம் செல்வராஜ் தலைவர், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அண்ணா சரவணன், மக்கள் தலைவன் வ.உ.சி., நலப்பேரவை மா.பா. நமச்சிவாயம், இல்லத்துப் பிள்ளைமார் சங்கம் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த வரன்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். விழா அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"