by Vignesh Perumal on | 2026-06-20 04:12 PM
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபரை வடமதுரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 58 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா, பான்மசாலா போன்ற உயிர்க்கொல்லி போதை புகையிலை பொருட்களின் புழக்கத்தைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டக் காவல் துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வடமதுரை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் (SI) பாண்டியன், சுரேஷ்பாபு மற்றும் காவலர்கள் உள்ளடங்கிய குழுவினர் சித்துவார்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் (42) என்பவரது வீட்டில் சட்டவிரோத புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்டு, ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, கண்ணனின் வீட்டிற்குள் நுழைந்த போலீசார் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது, வீட்டில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 58 பாக்கெட்டுகள் புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட போதை பொருட்களைப் பதுக்கி வைத்து, இளைஞர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றத்திற்காக கண்ணனை (42) வடமதுரை போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட கண்ணனுக்குப் புகையிலை பொருட்களை மொத்தமாக விநியோகம் செய்தது யார், இதன் பின்னணியில் உள்ள கடத்தல் நெட்வொர்க் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் போதை பொருட்களுக்கு எதிராகப் போலீசார் எடுத்து வரும் இந்தத் தொடர் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"