by satheesh on | 2026-04-30 08:56 PM
மஞ்சளார் அணையில் இருந்து குடிநீருக்காக தேனி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்த ஒரு முன்னறிவிப்பு ஏதும் இன்றி இன்று பொதுப்பணி துறையினர் தண்ணீர் திறந்து விட்டதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அச்சத்தில் உறைந்த பொதுமக்கள் !
தேனி மாவட்டம் : பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் இருந்து இன்று தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர்மட்ட உயர்விற்காக அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி நீரை பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி மஞ்சளார் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளார், மஞ்சளார் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த தண்ணீரானது தேனி மாவட்ட பகுதியான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, G.கல்லுப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தும்பலப்பட்டி, வத்தலகுண்டு முதல் சிவஞானபுரம் வரையிலான மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் மஞ்சளார் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் மேலும் பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி இன்று 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
மேலும் பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் மஞ்சளாறு ஆற்றுக் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திடீரென இன்று மஞ்சளார் ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!