by satheesh on | 2026-04-29 06:38 PM
மும்பையில் இரவு நேரத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு !
மும்பை: மும்பையில் இரவு தர்பூசணி சாப்பிட்டு ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் :
மும்பை, பைதோனி பகுதியில் தந்தை, தாய் மற்றும் இரு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் அவர்களது மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) என 4 பேர் உயிரிழந்தனர். இரவு உறவினர்களுடன் சேர்ந்து சிக்கன் புலாவ் சாப்பிட்ட பிறகு, நள்ளிரவில் குடும்பத்தினர் மட்டும் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். அதிகாலையில் வாந்தி, மயக்கம் என நிலைமை மோசமாகி, உடனே அவர்கள் ஜே.ஜே (JJ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நால்வரும் அடுத்தடுத்து உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புலாவ் சாப்பிட்ட உறவினர்கள் நலமாக இருப்பதால், தர்பூசணியே 'ஃபுட் பாய்சன்' ஆகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மீதமிருந்த தர்பூசணி பழத்தின் மாதிரிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடற்கூறுகள் தடயவியல் ஆய்வகத்திற்கு (Forensic Lab) சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. பழங்களில் நிறத்தை அதிகரிக்க ஊசி மூலம் ரசாயனங்கள் செலுத்தப்படுகிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடை காலத்தில் வெட்டி வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழைய உணவுகள் விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது மும்பை ஜே.ஜே மார்க் (JJ Marg) காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!
குற்றப்புலனாய்வுத்துறை தலைமை காவலர், காவல்துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.....!!!!"