| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

பெரும் சோகம்...! கார் மோதி மில் தொழிலாளி பலி...! போலீசார் விசாரணை...!

by Vignesh Perumal on | 2026-04-19 12:36 PM

Share:


பெரும் சோகம்...! கார் மோதி மில் தொழிலாளி பலி...! போலீசார் விசாரணை...!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், மில் தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

திண்டுக்கல் - கரூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் அவ்வப்போது விபத்துகள் அரங்கேறி வரும் நிலையில், இன்று ஒரு உயிர் பறிபோயுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (40) இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் (மில்) தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இன்று மகேஷ் தனது இருசக்கர வாகனத்தில் தாடிக்கொம்பு அடுத்த கிரியம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக மகேஷின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மகேஷ், தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அடிபட்ட காயங்கள் தீவிரமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி, சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர் யார்? என்பது குறித்தும், விபத்து நிகழ்ந்த சூழல் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மகேஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மில் தொழிலாளி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment