by satheesh on | 2026-04-12 11:58 AM
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை என புகார் ! ஏட்டு மீது வழக்கு !!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, நோயாளிக்குத் துணையாக இருந்த இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல்துறை ஏட்டு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு காலங்கரைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக அவரது மனைவி மருத்துவமனையில் தங்கியிருந்தார். அதே வார்டில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில், அந்த இளம்பெண்ணிடம் சென்ற போலீஸ் ஏட்டு, தனது செல்போனை சார்ஜ் செய்ய 'சார்ஜர்' உள்ளதா எனக் கேட்டுப் பேச்சுக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதோடு, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பெண் இரவு நேரம் என்பதால் அச்சத்தில் இருந்ததாகவும், பாலியல் தொல்லையால் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என அந்தப் பெண்ணிற்கு அவர் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டல் குறித்துத் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீருடையில் இருந்த காவலரே மருத்துவமனையில் இத்தகைய செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உரிய நேர்மையான விசாரணை நடத்தி மன உளைச்சலுக்கு ஆளான பெண்ணிற்கு உரிய நியாயம் கிடைத்திட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட காவலர் மீது சட்ட ரீதியான மற்றும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
யாரும் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்...! தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்..! பரபரப்பு...!
அதிமுகவின் "செக்" மாதிரி பிரச்சாரம்...! பறக்கும் படை வீடுவீடாக விசாரணை..!
திண்டுக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..! தீவிர ஆய்வு...!
கூலித்தொழிலாளி.....! கத்திமுனையில் சம்பவம்...! வாலிபர் கைது...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! ஆடிட்டர், பைனான்சியர் வீடுகளில்...! தேர்தல் நேரத்தில் திடீர் சோதனை...!