| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

மாணவி பலி - மரண வழக்கு ! தமிழ்நாட்டில் முதல் முறை - எஸ்பி அதிரடி !!

by satheesh on | 2026-04-11 02:04 PM

Share:


மாணவி பலி  - மரண வழக்கு !  தமிழ்நாட்டில் முதல் முறை  - எஸ்பி அதிரடி !!

நாட்டிலேயே  முதல்முறையாக வாகன விபத்து ஏற்படுத்திய வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கும் பிரிவில் குமரியில் வழக்கு பதிவு : கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அதிரடி! 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தின் முன்புறம் கனிமவளம் கடத்திச் செல்லும் டாரஸ் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் மகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவத்தில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி கடுமையான சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வழக்கில் டிரைவர் மீது குற்றமுறு மரணம் ஏற்படுத்திய பிரிவு உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து டாரஸ் லாரி வாகன ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கை காரணமாக விபத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தை உருவாக்கி  உயிர் பலிகள் ஏற்படுத்துவதை தடுக்க நாட்டிலேயே முதல் முறையாக அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். அதன்படி நேற்று முன்தினம் தக்கலை காவல் நிலையத்தில் அருகே நடைபெற்ற கனிமவள வாகனம் மோதி 19 வயது மாணவி ஹாட்லின் அபினா த/பெ. கிறிஸ்துராஜ் சரல் விளாகம், சிற்றாற்றின்கரை , களியல் என்பவர் இறந்த விபத்தில் தக்கலை காவல் நிலைய குற்ற எண் 164/2026 சட்டப்பிரிவுகள் 281, 125(a), 106(1) BNS @281, 125(a), 105 BNS என்று பத்து வருடம் தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளது விபத்தை தடுக்கும் நோக்கத்தில் பதிவு செய்யப்பட்டதை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர்.  மேற்படி விபத்து வழக்கில் டாரஸ் லாரியை ஓட்டிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (30/25) த/பெ விஸ்வநாதன், என்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், இது தொடர்பாக மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் தெரிவித்துள்ளதாவது கனிமவள லாரி மூலம் விபத்து ஏற்படுத்தினாலோ, அல்லது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினாலோ கடுமையான சட்ட பிரிவான 105 BNS -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் அவருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது எனவும் குமரி மாவட்டத்தில் விபத்தை தடுக்கும் பொருட்டும் அதனால் ஏற்படும் மரணத்தை தடுக்கும் பொருட்டும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சாலையின் தரத்தை பற்றி சற்றும் சிந்திக்காமல் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்துவதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என்று மாவட்ட எஸ் பி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment