by Vignesh Perumal on | 2026-04-11 11:14 AM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட புல்லக்காபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் திருவிழா, கோலாகலமான கொண்டாட்டங்களுடன் நிறைவடைந்தது.
தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் திருவிழா கடந்த சில நாட்களாக ஊர் பொதுமக்களால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
திருவிழாவின் இறுதி நாளான நேற்று (வெள்ளிக்கிழமை), அதிகாலை முதலே முத்தாலம்மனுக்குப் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். முத்தாலம்மனைப் பூஞ்சோலைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வின் போது, ராஜகம்பளத்தார் சமூகத்தின் பாரம்பரியக் கலையான தேவராட்டம் நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க, கலைஞர்கள் ஆடிய ஆட்டம் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது. வழிபாடுகள் முடிந்தவுடன், அம்மன் சிலையானது மேளதாளங்களுடன் ஊர்வலமாகப் பூஞ்சோலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அம்மன் ஊர்வலமாகச் சென்றபோது, புல்லக்காபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை (கலர் பொடிகள்) முகத்தில் தடவியும், காற்றில் தூவியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஊரே விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், மக்கள் ஆடிப்பாடி திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.
திருவிழாவையொட்டி எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கத் தேவதானப்பட்டி போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைத் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகமும், ஊர் திருவிழாக் கமிட்டியினரும் செய்திருந்தனர்.
இந்தத் திருவிழா மூலம் புல்லக்காபட்டி கிராமமே ஒற்றுமையுடனும், ஆன்மீக உணர்வுடனும் களைகட்டியது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
யாரும் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்...! தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்..! பரபரப்பு...!
அதிமுகவின் "செக்" மாதிரி பிரச்சாரம்...! பறக்கும் படை வீடுவீடாக விசாரணை..!
திண்டுக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..! தீவிர ஆய்வு...!
கூலித்தொழிலாளி.....! கத்திமுனையில் சம்பவம்...! வாலிபர் கைது...!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! ஆடிட்டர், பைனான்சியர் வீடுகளில்...! தேர்தல் நேரத்தில் திடீர் சோதனை...!