by satheesh on | 2026-04-07 04:33 PM
தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் என்ற பெயரை பெற்ற அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் !
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு தாக்கலின்போது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்தவகையில் தமிழகத்தில் யார் அதிக சொத்து தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, பார்த்தால் திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் லீமாரோஸ் மார்ட்டின் முதல் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் தாக்கல் செய்த வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில், தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.1,048 கோடி என குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் பெயரில் ரூ.4,159 கோடி மதிப்பிலான சொத்துகளும், மகன் ஜோஸ் டெய்சன் மார்ட்டின் பெயரில் ரூ.665 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் என்ற பெயரை லீமாரோஸ் பெற்றுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!