by satheesh on | 2026-04-02 07:49 PM
விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் திமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அவருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத் திடீரென அண்ணா அறிவாலயம் வந்திருப்பது விவாதமாகி இருக்கிறது.கடந்த மாதத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்டோர் திமுகவில் ஐக்கியமாகினர். இதன்பின் ஓபிஎஸ் தொகுதி வாரியாக திமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக ஓ.பி.ரவீந்திரநாத்தும் தொகுதி வாரியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனிடையே திமுக சார்பாக போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில் போடி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட ஓபிஎஸ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓபிஎஸ்க்கு முன் திமுகவில் இணைந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஓ.பி.ரவீந்திரநாத்க்கு சீட் கொடுக்கப்படவில்லை. அதேபோல் ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளராக மகராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஓ.பி.ரவீந்திரநாத் திடீரென அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். அவர் திடீரென அண்ணா அறிவாலயம் வந்ததன் பின்னணி குறித்து இதுவரை எதுவும் வெளிவரவில்லை.தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை அறுவடை செய்யவே ஓபிஎஸ் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதற்கான திட்டங்களை உடனடியாக திமுகவும் அரங்கேற்ற தொடங்கியது. இந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு முக்குலத்தோர் சமூக வாக்குகளை திமுக பக்கம் திரும்பவில்லை என்றால், அவரின் எதிர்காலமே சிக்கல் தான். அதேபோல் இந்த முறை திமுக சார்பாக கட்டாயம் சீட் கொடுக்கப்படும் என்று ஓ.பி.ரவீந்திரநாத் கருதி இருந்தார். ஆனால் ஓபிஎஸ்க்கு மட்டுமே சீட் அளிக்கப்பட்டுள்ளதால், ரவீந்திரநாத் தேர்தல் பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனை சரியாக செய்தால் மட்டுமே அவருக்கும் திமுகவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!