by Vignesh Perumal on | 2026-03-28 04:55 PM
திண்டுக்கல் மாநகரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் ரோந்து சென்றனர்.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டம் அருகே, நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் பதுக்கி வைத்து அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரைப் பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த தரணிபாலன் என்பது தெரியவந்தது.
போலீஸார் தரணிபாலனை கைது செய்து, அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
திண்டுக்கல் மாநகரில் டாஸ்மாக் நேரம் முடிந்து இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!