by Vignesh Perumal on | 2026-03-12 05:04 PM
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, 12 வயது சிறுமிக்குத் திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைப் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்குச் சென்ற சிறுமி, 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், சிகிச்சைக்காகச் சிறுமியைப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இந்தத் தகவலைக் கேட்டுச் சிறுமியின் பெற்றோர் நிலைகுலைந்து போயினர். மைனர் சிறுமி கர்ப்பமாக இருப்பது குறித்து சட்டப்படி மருத்துவமனை நிர்வாகம், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்திற்கு தகவல் தெரிவித்தது.
தகவல் அறிந்ததும் குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் மற்றும் முதுகுளத்தூர் அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் (23) என்ற வாலிபர், சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது வெளிச்சத்திற்கு வந்தது.
குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் அளித்தப் புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் ராகுல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ராகுலை இன்று அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான மருத்துவச் சிகிச்சைகளும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!