by satheesh on | 2026-03-08 06:34 PM
பாஜகவினரால் அக்கட்சியில் இருக்கும் பெண் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக பெண் கவுன்சிலர் ஒருவரே குற்றம் சாட்டியது தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி நகர் மன்றத்தின் 23 வது வார்டு உறுப்பினராக இருப்பவர் சுனிதா. இவர் பாஜக கவுன்சிலர் . இவரையும் சேர்த்து தென்காசி நகராட்சியில் 5 பாஜக கவுன்சிலர்கள் உள்ளனர் . பாஜகவின் மற்ற நான்கு உறுப்பினர்களும் நிர்வாகிகளும்இவரது வார்டில் எந்த பணிகளையும் நடத்த விடாமல், கட்சிப் பணிகளை மேற்கொள்ள விடாமல் இவருக்கு பல்வேறு வகைகளில் இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இவரைப் பற்றி அவதூறாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனால் வேதனை அடைந்த சுனிதா இன்று நடந்த தென்காசி நகராட்சி கூட்டத்தில் கண்ணீர் மல்க இதனை வெளிப்படுத்தினார். நான்கு வருடமாக எனக்கு மனரீதியாக மிகுந்த தொல்லை கொடுத்தார்கள். கட்சி மாவட்ட மற்றும் உயர் மட்ட நிர்வாகிகளிடம் இது குறித்து புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. உச்சகட்டமாக இன்று சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்கிறார்கள். அதனால்தான் நகராட்சி கூட்டத்தில் முறையிடுகிறேன் இதைத் தவிர வேறு என்னால் எங்கு முறையிட முடியும் என்று கண்ணீர் மல்க கூறினார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனவே பெண்களை மதிப்பவர்களை கட்சியின் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று சுனிதா வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். சொந்தக் கட்சியிலேயே பாதுகாப்பு இல்லை என்று பாஜகவின் கட்சியின் பெண் கவுன்சிலரே நகராட்சி கூட்டத்தில் கண்ணீர் மல்க குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!