by admin on | 2026-03-04 07:34 PM
தேனி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் வண்ண மீன் உற்பத்தி பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, வண்ண மீன்கள் உற்பத்தி செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், வைகை அணைப்பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மீன் பண்ணையில் ரூ. 8.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மீன் உற்பத்தி பண்ணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.03.2026) திறந்து வைத்து, வண்ண மீன்கள் உற்பத்தி செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
மத்திய மாநில மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் நிதி உதவியுடன் நடுத்தர அளவிலான வண்ண மீன் பண்ணை அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.3.20 இலட்சம் மானியத்துடன் ரூ.8.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பண்ணையில் கோல்டு, ஏஞ்சல், டெட்ரா, பிளாட்டி, கப்பீஸ், மோலி, ஜிப்ரா, டைகர், மற்றும் கொய் போன்ற வண்ண மீன்கள் தொட்டிகளில் இருப்பு செய்து உற்பத்தி செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மதுரை மண்டலம்) திரு. ந.வேல்முருகன், உதவி இயக்குநர் (தேனி) திரு.ந.சௌந்தரபாண்டியன் மற்றும் மீன்வள ஆய்வாளர், சார் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!