by Vignesh Perumal on | 2026-02-28 03:36 PM
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 6 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், ம.மு.கோவிலூர் அருகே உள்ள பெரியகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்தன் என்கிற மருதமுத்து (42). இவர் அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்டத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு (நேற்று முன்தினம்), மருதமுத்து மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
கொலையாளிகளை விரைந்து பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் உத்தரவிட்டார். அதன்பேரில், வேடசந்தூர் டி.எஸ்.பி பவித்ரா மேற்பார்வையில், வடமதுரை காவல் ஆய்வாளர் நிதிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், கொலையாளிகள் பதுங்கியிருந்த இடம் கண்டறியப்பட்டது.
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கொலையில் தொடர்புடைய 6 பேர் பிடிபட்டனர். அவர்கள்: வினோத்குமார் (குளிப்பட்டி, சீலப்பாடி அருகே), ஜெயக்குமார் (ரவுண்ட் ரோடு பகுதி), தர்மராஜ் (ரவுண்ட் ரோடு பகுதி), பகவதி (காப்பிளியபட்டி), முத்துக்குமார் (பெரியகோட்டை), கவியரசன் (பண்ணைபட்டி) ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொலைக்கு உபயோகப்படுத்தப்பட்ட கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், முன்கூட்டியே திட்டமிட்டு இந்தப் படுகொலை அரங்கேற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இடப்பிரச்சினை அல்லது முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
அமைச்சர் கே என் நேருவை துரத்தும் வழக்கு - எஃப் ஐ ஆர் போடப்படுமா? விரைவில் கிளைமாக்ஸ் !
இஸ்ரேல் - கற்க வேண்டிய பாடம் என்ன? கற்றுக்கொண்ட பாடம் என்ன?
கொங்கு மண்டலத்தில் N D A போட்டியிடும் தொகுதிகள் - யார் யாருக்கு எந்தெந்த தொகுதி ? அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!
சங்கீதாவின் அட்டாக் - அப்செட் ஆன விஜய் ! சமாதான டீலிங்?