by satheesh on | 2026-02-26 05:33 PM
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்ச் முதல் வாரத்தில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடலாம் என கூறப்படுகிறது. விஜய், காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு வழங்கவும் 5 முதல் 6 அமைச்சரவை பதவிகள் அளிக்கவும் தயாராக இருப்பதாகவும், 100 தொகுதிகள் வரை வழங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி மார்ச் 5ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது ராகுல் - விஜய் சந்திப்பு நடக்கலாம் என்றும் பேசப்படுகிறது. என்றாலும், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும் நிலைப்பாட்டில் கட்சி உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்.,ஐ தவெக அழைத்தது ;
கூட்டணிக்காக எங்களுக்கு தவெக அழைப்பு விடுத்தது. எங்கள் பலத்தை அங்கீகரித்துள்ளது. அதிகார பகிர்வை எந்த அரசியல் கட்சி வேண்டாம் என்று சொல்வார்கள். நாங்கள் ஒன்றும் தொண்டு நிறுவனம் நடத்தவில்லை. 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தவெகவால் ஈர்க்கப்பட்டிருப்பதாக நான் கேள்விப்படுள்ளேன்.. அது எங்கள் கவனத்தை பெற்றுள்ளது’’ - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!