by satheesh on | 2026-02-25 02:14 PM
என்னிடம் இல்லாதது அவனிடம் என்ன இருக்கு?- பக்கத்து வீட்டு இளைஞருடன் கள்ளக்காதலில் திளைத்த மனைவி; கோபத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு; அனாதையான இரு குழந்தைகள்..! கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகியோர் குடியிருந்து வந்தனர். அதனால் பார்த்தசாரதியின் குடும்பமும் சுசில் குடும்பமும் பழகி வந்தனர். இந்நிலையில் சுசிலுக்கும், ஜமுனாவிற்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தான் ஜமுனா பார்த்தசாரதியை விட்டு பிரிந்து சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மனைவி பிரிந்ததற்கு சுசில்தான் காரணம் என பார்த்தசாரதி கருதினார். அதைத் தொடர்ந்து சுசிலுக்கும் பார்த்தசாரதிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் 15.02.2026- ம் தேதி மது போ*தையில் பைக்கில் பார்த்தசாரதி வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு சுசில், தன்னுடைய பைக்கை அங்கு நிறுத்தியிருந்தார். அதனால் பார்த்தசாரதியால் பைக்கை அங்கு நிறுத்த முடியவில்லை. அதனால் பார்த்தசாரதி, சுசில் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது சுசிலும் பார்த்தசாரதியுடன் தகராறு செய்தாகக் கூறப்படுகிறது.;திடீரென ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, தன்னுடைய வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துக் கொண்டு சுசிலின் வயிற்றில் கத்தியால் குத்தினார். இதனால் அலறிய சுசிலின் சத்தம் கேட்டு தடுக்க ஓடிவந்த கிரிஜாவையும் பார்த்தசாரதி கத்தியால் குத்தினார். இருவரும் ர*த்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். பின்னர் பார்த்தசாரதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்குப் போராடிய கணவன் மனைவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கானத்தூர் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீஸார், விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுசில், அவரின் மனைவி கிரிஜா அடுத்தடுத்து உயிரிழந்தனர். பார்த்தசாரதியை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் என் மனைவி என்னை விட்டு பிரிந்து செல்ல சுசில்தான் காரணம் என பார்த்தசாரதி விசாரணையில் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். உயிரிழந்த சுசில்க்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளார். தாய் தந்தையை இழந்ததால் தற்போது ஆதரவின்றி தவித்து வருகின்றனர். அடுத்தவர் மனைவியுடன் சிற்றின்ப சந்தோசம் அனுபவித்த இளைஞரின் செயலால் அவரது இரு குழந்தைகள் அனாதையாகி நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆனது ..!
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!