by admin on | 2026-02-24 06:58 PM
துணை வாக்குச்சாவடி மையம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட
அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (24.02.2026)
துணை வாக்குச்சாவடி மையம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி,
199. பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி, 200. போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் 201. கம்பம் சட்டமன்றத் தொகுதி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி,
தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் – 344 வாக்குச்சாவடிமையங்களும், 199.பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் – 359 வாக்குச்சாவடி மையங்களும், 200.போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் – 345 வாக்குச்சாவடிமையங்களும் மற்றும் 201.கம்பம் சட்டமன்றத் தொகுதியில் – 346 வாக்குச்சாவடிமையங்களும் என மொத்தம் 1394 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு. வாக்காளர்கள் எவ்வித சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 1200 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களில் துணை வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களில், துணை வாக்குச்சாவடி மையம் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும், வாக்குச்சாவடி மாற்றம் தொடர்பான கோரிக்கை குறித்து பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகம், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார், வாக்காளர் பதிவு அலுவலர் / பெரியகுளம் சார் ஆட்சியர் திரு.ரஜத் பீடன், இ.ஆ.ப., வாக்காளர் பதிவு அலுவலர்/மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.நல்லையா, வாக்காளர் பதிவு அலுவலர்/உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திரு.செய்யது முகமது, வாக்காளர் பதிவு அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி கவிதா, வட்டாட்சியர் (தேர்தல்) திரு.சுருளி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / வட்டாட்சியர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் / நகராட்சி ஆணையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
த வெ க மகளிர் தின விழா - விஜய் உரையின் ஹைலைட் !
அமைச்சர் கே என் நேருவை துரத்தும் வழக்கு - எஃப் ஐ ஆர் போடப்படுமா? விரைவில் கிளைமாக்ஸ் !
இஸ்ரேல் - கற்க வேண்டிய பாடம் என்ன? கற்றுக்கொண்ட பாடம் என்ன?
கொங்கு மண்டலத்தில் N D A போட்டியிடும் தொகுதிகள் - யார் யாருக்கு எந்தெந்த தொகுதி ? அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது?
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!