by Vignesh Perumal on | 2026-02-21 11:48 AM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் திமுக ஒன்றிய செயலாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். இன்று அவர் பொதுமக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரை நோக்கி வந்துள்ளார்.
அவர் வீரா.சாமிநாதனுக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவிக்க வருவதாகவே அனைவரும் கருதினர். ஆனால், சால்வை அணிவிப்பது போல நெருங்கிய அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென வீரா.சாமிநாதனை சரமாரியாகக் குத்தினார்.
இந்தத் திடீர் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். அப்போது, நாச்சிமுத்து என்பவர் குறுக்கே சென்று தடுத்தபோது, அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் வீரா.சாமிநாதன் மற்றும் நாச்சிமுத்து ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய இளைஞரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த இளைஞரை உடனடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன? முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது அரசியல் காரணங்கள் ஏதேனும் உண்டா? என்ற கோணத்தில் வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வேடசந்தூர் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனை முன்பாகத் திரண்டுள்ளதால் அந்த இடமே பரபரப்பாகக் காணப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!