by satheesh on | 2026-02-20 03:55 PM
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தீப்பெட்டி ஆலையில் திடீர் தீபத்து - 4 பெண்கள் காயம் !
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் கே.வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இன்று வழக்கம் போல் பணியாளர்கள் தொழிற்சாலைக்கு வேலைக்காக வந்தனர். ஆலையில் தீக்குச்சி குவித்து வைத்து, தீப்பெட்டிகளில் அடைக்கும் பணிகள் நடந்து வந்தது. அப்போது குவித்து வைக்கப்பட்டிருந்த தீக்குச்சிகளில் உராய்வு ஏற்பட்டு, புகை வந்துள்ளது. திடீரென தீப்பிடித்து பரவியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவல் அறிந்து கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த முத்துமாரி(44), புஷ்பம்(60) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தீ விபத்து ஏற்பட்ட பதட்டத்தில் லட்சுமி (49), முத்துமாரியம்மாள் ஆகிய இருவருக்கும் லேசான ரத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று சென்றனர்.விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து கழுகுமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!