by admin on | 2026-02-19 09:22 AM
தேனி மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா,இ.கா.ப., அவர்கள், உத்தரவின்பேரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதி செய்யும் வகையில், தேனி மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் நபர்கள் கவனமாக ஆய்வு செய்யப்பட்டதுடன், தேவையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. தேர்தல் விதிமுறைகள் மீறப்படாதவாறு பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய காவல்துறையினர் இரவு பகலின்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து காவல்துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!