by satheesh on | 2026-02-16 11:05 AM
"ஏம்மா எதுக்கு மூணு பிள்ள பெத்துகிட்ட?" மனு கொடுக்க வந்த இடத்துல அதிகாரி கேட்ட கேள்வி.. மன உளைச்சலில் மாற்றுத்திறனாளி குடும்பம் :
திருப்பத்தூர் : வட்டாட்சியர் அலுவலகத்தில், மனு கொடுக்க வந்த ஒரு ஏழைப் பெண்ணை அதிகாரி ஒருவர் தரக்குறைவாகப் பேசிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளியான தனது கணவருடன் உதவி கோரி வந்த அந்தப் பெண்ணிடம், அங்கிருந்த அதிகாரி ஒருவர் குறைகளைக் கேட்பதற்குப் பதிலாக, "ஏன் 3 பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டாய்?" எனத் தனிப்பட்ட முறையில் மிகவும் நாகரிகமற்ற முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாரியின் இந்த அடாவடிப் பேச்சால் மனவேதனையடைந்த அந்தப் பெண், தன்னை அவமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியரிடம் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார். அரசு அலுவலகங்களுக்கு உதவி தேடி வரும் பொதுமக்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டிய அதிகாரிகளே, இப்படி அவர்களின் வறுமையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கிண்டல் செய்வது அதிகார மிரட்டலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஏழை எளிய மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற அதிகாரிகளின் போக்கு, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, தமிழக அரசு இது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு .
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!