by admin on | 2026-02-13 09:09 PM
தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் மாநில நதலைவர் ப. ஹரிஹரன்
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு பயனளித்து வருகின்றன. குறிப்பாக மகளிர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருந்து, இரவு பகல் பாராது, வெயிலும் மழையும் பொருட்படுத்தாமல் சமூக நலனுக்காக பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பும் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியமானதாகும். பொதுமக்களின் குரலாகவும், அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய பாலமாகவும் பத்திரிக்கையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே,அBரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்,
நல வாரிய உறுப்பினர்களாக உள்ளவர்கள்,
அரசு அடையாள அட்டை மற்றும் போக்குவரத்து அட்டை பெற்றுள்ளவர்கள்,
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள்
இவர்களை அடிப்படையாகக் கொண்டு, கோடைகால ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தமிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தேர்தல் காலங்களில் கடும் உழைப்புடன் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் தனிப்பட்ட ஊக்கத்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
பத்திரிக்கையாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கையை அரசு விரைவில் பரிசீலித்து சாதகமான அறிவிப்பை வழங்கும் என நம்புகிறோம்.
ப. ஹரிஹரன்மா நில தலைவர்த மிழக பத்திரிக்கையாளர்கள் சங்கம்
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!