by admin on | 2026-02-13 07:34 PM
தேனி மேற்கு மாவட்டம் சார்பாக விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு.
கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
தேனி மேற்கு மாவட்டம் சின்னமனூர் மற்றும் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அருகே, கிராம மக்களின்125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்க முயலும் விடியா திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தமபாளையம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கல்யாணகுமார் மற்றும் வினோத்குமார்,சின்னமனூர் ஒன்றிய கழக செயலாளர்கள் எல்லப்பட்டி முருகன் மற்றும் கண்ணன் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
கழக அமைப்புச் செயலாளரும்,தேனி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமை தாங்கினார்.
இதில் 125 நாள் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கு முயலும் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!