by satheesh on | 2026-02-13 02:10 PM
கேரள : பத்தினம் திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியில் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த ஜனவரி 21ஆம் தேதி வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 55 சவரன் தங்க நகைகளை கொத்தாக அள்ளிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக பந்தளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து தேடுதல் வேட்டையில் இறங்கியும் கொள்ளையர்கள் சிக்கவில்லை. பின்னர், அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் மூலம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களின் லிஸ்ட்டை எடுத்து ஆய்வு செய்தனர். அதில், திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் செல்போன் அழைப்புகள் அங்கு வட்டமடித்துள்ளன. பின்னர், அவரின் தலைமையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. பின்னர், கேரள போலீசார் உடனடியாக திருநெல்வேலிக்கு விரைந்து வந்தனர்.
அவரது விலாசத்தை கண்டுபிடிப்பது எப்படி என்ற குழப்பத்துடன் வந்த போலீசாரின் வேலையை எளிதாக்கும் வகையில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில் திருக்குறுங்குடி பேரூர் திமுக மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ் என சிரித்த முகத்துடன் போட்டோ இருந்தது. இதையடுத்து, நேராக அவரது வீட்டிற்கு சென்ற கேரள போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரது கூட்டாளிகள் கணேஷ் மற்றும் இசக்கி ஆகியோரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 50 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்து, அடுத்தகட்ட விசாரணைக்காக கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். கைதான மூன்று பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று கொள்ளையடிப்பதையே பிரதான தொழிலாக கொண்டிருந்தது தெரியவந்தது. திருட்டு நகைகளை விற்று கல்லா கட்டிய ரமேஷ் அண்ட் கோ, அரசியல் அவதாரம் எடுத்து போலீசாரிடம் இருந்து தப்பிக்க மாஸ்டர் பிளான் போட்டுள்ளனர். அதற்குள் கேரளாவில் வெளிநாடு வாழ் இந்தியர் வீட்டில் கைவரிசை காட்டி தொக்காக மாட்டியுள்ளனர். இவர்கள் மீது கேரளாவில் மட்டும் 20 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. அத்துடன், கர்நாடக மாநிலம் உடுப்பியிலும் ரமேஷ் கேங் மீது கொள்ளை வழக்கு பதிவாகியுள்ளது. விசாரணைக்குப் பின்னர் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை பந்தளம் சிறையில் அடைத்தனர். திருநெல்வேலியில் இருந்து ரயில் ஏறி வெளிமாநிலங்களுக்கு சென்று கொள்ளையில் ஈடுபட்ட கேடி கும்பல் கேரளாவில் வசமாக சிக்கியதால் பந்தளம் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!