by satheesh on | 2026-02-12 11:42 AM
NEET UG 2026 விண்ணப்பப் பதிவு தொடக்கம்; மே 3-ம் தேதி தேர்வு!
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் இதர இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் இளநிலை நீட் 2026 தேர்விற்கான விண்ணபப் பதிவை தேசிய தேர்வு முகமை தொடங்கியுள்ளது.
மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் மே 3-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை நீட் 2026 விண்ணப்பம் தொடக்கம்
MBBS, BDS ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், BAMS, BUMS, BSMS, BHMS ஆகிய இளநிலை இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாக இளநிலை நீட் 2026 நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளநிலை நீட் 2026 தேர்விற்கு ஆன்லைன் விண்ணப்பம் பிப்ரவரி 8 முதல் தொடங்கி மார்ச் 8 வரை பெறப்படுகிறது.
BVSc & AH மற்றும் ராணுவ சேவைக்கான மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எஸ்சி நர்சிங் படிப்பிற்கு நீட் மதிப்பெண்கள் எடுத்துகொள்ளப்படுகிறது.
தமிழ் உட்பட மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.
நீட் 2026 விண்ணப்பிப்பது எப்படி?
நீட் தேர்விற்கு மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மாணவர்கள் உரிய மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடி கொண்டிருக்க வேண்டும். ஒருவர் ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்பிக்க முடியும்.
படி 1 : https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : முகப்பு பக்கத்தில் Registration for NEET UG 2026 என இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்தால் மறுபக்கம் திறக்கும்.
படி 3 : அதில் முதலில் தேர்விற்கு பதிவு செய்து, பின்னர் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
படி 4 : இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி நிறைவு செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு எடுத்து வைத்துகொள்ளவும்.
தேர்வு கட்டணம் எவ்வளவு?
நீட் தேர்விற்கு பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.1,700 கட்டணமாக செலுத்த வேண்டும். EWS மற்றும் ஒபிசி மாணவர்கள் ரூ.1,600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ரூ.1,000 செலுத்த வேண்டும். மேலும், ஜிஎஸ்டி உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி !
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!