by satheesh on | 2026-02-08 05:59 PM
முதலையை பிடிக்க தீவிரம் காட்டும் வனத்துறை !
கன்னியாகுமரி : களியல் பகுதி ஆற்றில் முதலையின் நடமாட்டம் இருப்பதாகவும், சிலர் முதலையினை கண்டதாகவும் ஒருசில வீடியோக்கள் வைரலாக, அப்பகுதி மக்களிடையே உச்சக்கட்ட பீதி பரவியது. முதலையை கண்டதாக கூறப்பட்ட உறை கிணற்றில் அதன் பருமன் மற்றும் உடல் அளவை கண்டறிய வனத்துறை சில நடவடிக்கை எடுத்தனர்.. அப்பகுதியில் மாவட்ட வன அலுவலர் உட்பட வனத்துறை பணியாளர்கள் படகில் சென்று ஆய்வும் நடத்தினர். இந்நிலையில், ஆற்றில் கிடக்கும் முதலையை பிடித்து மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக... மாவட்ட வன அலுவலர் முனைவர். அ.அன்பு IFS அவர்களின் உத்திரவின் பெயரில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் மனோகரன் அவர்களின் முன்னிலையில், களியல் வனசரகர் மொய்தீன் அப்துல் காதர் தலைமையில் வனப்பணியாளர்கள் முதலையை பிடிக்க உறைகிணற்றின் அருகே வலை அமைத்து மிதவை கூண்டும் வைத்தனர். இப்பகுதியில் மக்கள் கூடவோ, அடிக்கடி வந்து பார்க்கவோ, மேலும், முதலை பற்றிய பொய்யான தகவலும், வீண் வதந்தியும் சமூகவலைதளத்தில் பரப்பி பொதுமக்களை அச்சமடைய வைக்கவோ செய்யாதீர்கள், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் களியல் வனசரகர் அறிவுறை வழங்கியுள்ளார்.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!