by satheesh on | 2026-02-07 11:03 AM
வீட்டின் அருகில் மது குடித்ததைக் கண்டித்ததால் வாலிபர் கொலை: 3 மீன் வியாபாரிகள் கைது!*கோவில்பட்டியில் வீட்டின் அருகில் மது குடித்ததைக் கண்டித்ததால் வாலிபரை கற்களால் தாக்கிக் கொலை செய்த 3 மீன் வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (28) என்பவர், திருப்பூர் பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆவல்நத்தம் பாலம் அருகே அவர் மர்ம நபர்களால் கற்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான வேல்முருகன் (35), அசோக் குமார் (28) மற்றும் முனியசாமி (35) ஆகியோருக்கும் கார்த்திக்கிற்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று அவர்கள் கார்த்திக் வீட்டின் அருகே மது குடித்ததைக் கார்த்திக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மூவரும் அவரை செங்கற்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆசிரியர் சம்பளம் பெற்று மோசடி....????
கஞ்சா கடத்தலில் முறுக்கு வியாபாரி - சொந்த ஊரில் தொழிலதிபர் ! அலேக்ககாக அள்ளிய ஆந்திரா போலீஸ் !!
கோவையில் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை !
தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....!!!
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக நெல் சாகுபடிக்கு கலெக்டர் வைத்தியநாதன் நீரை திறந்து வைத்தார்...!!!