by satheesh on | 2026-02-07 10:50 AM
3000 கி.மீ. பாய்ந்து தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி ;
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட தரை விட்டு தரை பாயும் அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து இன்று (பிப்ரவரி 6) இந்த சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் ராணுவம் இணைந்து இந்த சோதனையை நடத்தியது. ஏவுகணையின் அனைத்து தொழில்நுட்பக் கூறுகளும் வெற்றிகரமாக செயல்பட்டன எனவும் ஏவுகணை அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி-3 ஏவுகணை சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது. இது 1.5 டன் எடையுள்ள அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ஏவுகணையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!