by admin on | 2026-02-04 07:22 PM
தேனியில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை தொடராமல் விலகிய எஸ்சி எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு முறைகேடாக வருகை பதிவு செய்து அரசின் சலுகைகளை பெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்
தேனி அருகே தேவதானப்பட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்தக் கல்லூரியில் பயிலும் எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையினை முறைகேடாக கல்லூரி நிர்வாகம் பெற்று வருவதாக தேனி மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது
பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் புதிதாக சேர இருக்கும் மாணவர்களிடம் தங்களது கல்லூரியில் சேர்ந்து கொள்ளுங்கள் என கூறி அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு தங்களது கல்லூரியில் தான் பயில வேண்டும் என மாணவர்களை வற்புறுத்துவதாகவும்
மேலும் கல்லூரியில் படிப்பை தொடர விருப்பம் இல்லாமல் விலகும் மாணவர்களிடம் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்காமல் மூன்று ஆண்டுகளுக்கான கல்லூரி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் என கூறுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் கல்லூரியில் படிப்பை தொடராத எஸ்சி எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியில் படிப்பை தொடருவது போல் முறைகேடாக வருகை பதிவேடு செய்து அரசின் கல்வி சலுகைகளை பெற்று வருவதாக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!