by admin on | 2026-02-02 07:33 PM
தேனி மாவட்ட காவல்துறையின் சார்பில், ( RTOR - Refresher Training For Other Ranks ) காவலர்களுக்கான திறன் மேம்பாட்டு மறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
மேற்படி பயிற்சி வகுப்புகள், தேனி மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B. சினேஹா ப்ரியா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றன.இப்பயிற்சி நிகழ்வில், தேனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முத்துக்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் DCRB திரு.தேவராஜ், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இப் பயிற்சியின் போது, சட்ட ஒழுங்கு பராமரிப்பு, பொதுமக்களுடன் நட்பு முறையில் செயல்படுதல், அவசர கால நடவடிக்கைகள், மற்றும் சமகால காவல் பணிகளுக்குத் தேவையான புதுப்பிக்கப்பட்ட செயல்முறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் காவலர்களின் தொழில்முறை திறன், சட்ட அறிவு மற்றும் பணித் திறனை மேலும் மேம்படுத்துவது இப் பயிற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!
கண்ணை மூடிய காதல் - காதலனுக்கு பைக் ! திருட்டு வழக்கில் காதலியை தட்டி தூக்கிய போலீஸ் !!