by admin on | 2026-02-02 02:09 PM
அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமாரிடம் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.தெருக்களில் அடிப்படை வசதிகள் செய்யாமல் உள்ளதாகும் பார்வையிடுமாறு பொதுமக்கள் அழைப்பு விட்டும் அதை பார்வையிடாமல் புறப்பட்டுச் சென்ற பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 88.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் முடிவடைந்தனர்.
இந்நிலையில் முடிவடைந்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக இன்று பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் ஆகியோர் புதிய விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தனர்.
அப்போது 13, 14, 15, ஆகிய வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சாக்கடை வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாலும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள், உட்பட இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளவில்லை மேலும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத நிலையில்இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமும் இணைந்த பகுதி மக்கள் விழாவுக்கு வருகை தந்த பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமாரை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு, தங்கள் பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பட்டதோடு, நாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தங்கள் பகுதியை வந்து நேரில் பார்வையிடுமாறும், தாங்கள் வாழும் இடத்தை பார்த்து அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் பிரச்சனைக்குரிய தெருக்களை பார்வையிடாமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனால் அங்கிருந்த இளைஞர்கள் பொதுமக்கள் ஆத்திரமடைந்து அங்கு உள்ள நிர்வாகிகளிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !
9-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்..! 16 வயது சிறுவன் மீது...! போலீசார் விசாரணை..!