by admin on | 2026-02-02 01:51 PM
தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து மணிகட்டி ஆலமர பகுதிக்கு செல்லும் தோட்டத்துச் சாலையில் பிரதாப் என்பவர் தனது தோட்டத்தில் மாட்டு கொட்டகை அமைத்து பத்துக்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகின்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் வழக்கம் போல் தனது மாட்டுக் கொட்டகைக்கு வருகை தந்து பார்த்த போது ஒரு ஆடு மற்றும்மூ ன்று கன்று குட்டிகள் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் பலத்த காயம் அடைந்து இறந்து கிடந்துள்ளது.மே லும் ஒரு கன்றுக்குட்டி பலத்த காயம் அடைந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரதாப் கம்பம் மேற்கு வனச்சரகத் துறையின் இருக்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு ஆடு ஒன்று சிறுத்தை தாக்குதல் முறையில் மர்மமான முறையில் தாக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும்,
நேற்று இரவு அதே போல் சிறுத்தை வந்து மூன்று கன்றுக்குட்டி மற்றும் ஒரு ஆட்டினை தாக்கி பலத்த காயம் அடைய செய்து இறந்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் அந்த பகுதியில் சிசிடிவி காட்சிகளை அமைத்து சோதனை செய்ததில் செந்நாய்கள் கூட்டம் அதிகம் இருப்பதாகவும், தற்போது இறந்து கிடக்கின்ற கன்று குட்டிகளின் மீது சிறுத்தை தாக்குதல் போன்ற சம்பவங்களும் செந்நாய்கள் தாக்குதல் போன்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாகவும், தாக்குதல் நடத்திய வனவிலங்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!
கண்ணை மூடிய காதல் - காதலனுக்கு பைக் ! திருட்டு வழக்கில் காதலியை தட்டி தூக்கிய போலீஸ் !!