by admin on | 2026-02-02 01:38 PM
வீட்டின் முன்பு ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை தேனி காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை*
பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை?
தேனி மாவட்டம் தேனி நகராட்சி அலுவலகம் ஆஞ்சநேயர் கோயில் தெரு பகுதியில் பழக்கடை பாண்டி (72) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தேனியில் பைனான்ஸ் தொழில் நடத்தி பைனான்ஸ் வழங்கி வருகிறார் .இ ந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் இருந்து ரேஷன் கடை செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுத்து புறப்பட முற்பட்டபோது அடையாளம் தெரியாத நபர்கள் பாண்டியனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் கழுத்தில் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பாண்டியன் உயிரிழந்தார். இ தனையடுத்து பாண்டியனின் மனைவி வீட்டில் இருந்து அலறி அடித்தபடியே வெளியே வந்து தனது கணவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதார்.அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேனி காவல்துறையினர் உயிரிழந்த பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேனி காவல்துறையினர் எத்தனை நபர்கள் சேர்ந்து கொலை செய்தார்கள், என அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.னா ன்ஸ் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!
கண்ணை மூடிய காதல் - காதலனுக்கு பைக் ! திருட்டு வழக்கில் காதலியை தட்டி தூக்கிய போலீஸ் !!