by satheesh on | 2026-02-01 10:42 PM
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட ஆய்வாளர் – என்னை விட்டு விடுங்கள் குழந்தை போல் அழுத வீடியோ வைரல்:
பெங்களூரு : லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்ட காவல் ஆய்வாளர் ஒருவர், கைது செய்யப்பட்ட தருணத்தில் நடுரோட்டில் குழந்தை போல அழுது ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கே.பி. அக்ரஹாரா காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரை மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த தொழிலதிபர் லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், லோக் ஆயுக்தா போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆய்வாளர் கோவிந்தராஜுவிடம் கொடுக்கச் செய்தனர். லஞ்சத் தொகையை பெற்றுக் கொண்ட உடனே மறைந்திருந்த அதிகாரிகள் அதிரடியாக அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நேரத்தில், தனது தவறை உணர்ந்து அமைதியாக இருக்க வேண்டிய நிலையில், ஆய்வாளர் கோவிந்தராஜு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயலும் வகையில் “என்னை விட்டுவிடுங்கள்” எனக் கெஞ்சியபடி நடுரோட்டில் குழந்தை போல சத்தமிட்டு அழுது கூச்சலிட்டார். அவரது இந்த நடத்தை அங்கு இருந்த பொதுமக்களையும் அதிகாரிகளையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு காவல் ஆய்வாளரே லஞ்சம் வாங்கியபின் இவ்வாறு சிறுபிள்ளை போல் அழுது ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது - நன்றி.!
இணை ஆசிரியர் ;N சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!
கண்ணை மூடிய காதல் - காதலனுக்கு பைக் ! திருட்டு வழக்கில் காதலியை தட்டி தூக்கிய போலீஸ் !!