by satheesh on | 2026-01-31 02:52 PM
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ; திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டம், பழனி தைப்பூசம் திருவிழாவானது வருகின்ற 01.02.2026 ம் தேதி நடைபெறவுள்ளது.தைப்பூச திருவிழாவிற்கு பழனி வரும் பக்தர்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும் பொருட்டும் மலைக்கோவில் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் பாதையும் பக்தர்கள் வசதிக்காக கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.1 . பக்தர்கள் கடந்த ஆண்டு தேவர்சிலை, சன்னதி ரோடு, பாதவிநாயகர் கோவில், அடிவாரம் காவல் நிலையம், குடமுழக்கு மண்டபம் வழியாக மலைக்கோவில் சென்ற வழி மாற்றப்பட்டு தற்போது கொடைக்கனால் ரோடு (No 1 Gate) மற்றும் தேவஸ்தான பேருந்து நிலையம் (No 2 Gate) வழியாக வந்து மலைக்கோவில் செல்லும் வரிசையில் சென்று குடமுழக்கு மண்டபம் வழியாக மலைக்கோவிலை அடையலாம். மேற்படி வரிசையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து இடங்களிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
2. பாதவிநாயகர் கோவில் செல்லவும், கிரிவீதியை சுற்றி வரவும் பக்தர்களுக்கு எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. கடந்த வருடம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு மலைக்கோவில் படிப்பாதை வழியாக கீழே இறங்கி அய்யம்புளி ரோடு வழியாக மட்டுமே வெளியே செல்லும் வழியாக இருந்தது. தற்போது சாமி தரிசனம் செய்து விட்டு மலைக்கோவில் படிப்பாதை வழியாக கீழே இறங்கும் பக்தர்கள் கிரிவீதியில் உள்ள அனைத்து பாதைகள் வழியாகவும் தங்களது வாகனங்கள் நிற்கும் இடத்திற்கு செல்லலாம்.
3. மேற்கண்ட வழிகள் மாற்றப்பட்டுள்ளதால் பக்தர்கள் எளிதில் Gate No1 மற்றும் Gate No 2 ஆகியவற்றை அடையும் பொருட்டு வெளியூர் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் APA காலேஜ் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. உள்ளுர் பேருந்துகள் (டவுன் பஸ் மட்டும்) வ.உ.சி பேருந்து நிலையத்தில் அனுமதிக்கப்படும்.
4. திண்டுக்கல் மற்றும் மதுரை மார்க்கமாக பயணிகளை ஏற்றி வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலசத்திரம், ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை வழியாக மானூர் பைபாஸ் - பாலாஜி மில் -BVB School - இராமநாதநகர் JN கொடைக்கானல் In வழியாக சிவகிரிப்பட்டி APA கல்லூரி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து சேர வேண்டும்.
5. கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை, பழைய தாராபுரம், புது தாராபுரம் ரோடு வழியாக பயணிகளை ஏற்றி வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மானூர் பைபாஸ் - பாலாஜி மில் -BVB School - இராமநாதநகர் JN - கொடைக்கானல் in வழியாக சிவகிரிப்பட்டி APA கல்லூரி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து சேர வேண்டும்.
6. பக்தர்களின் வசதிக்காக மூன்று இலவச சிறப்பு பேருந்துகள் சண்முகநதி, BVB School இராமநாதநகர் JN - கோசாலை பேருந்து நிலையம்- வேல் ரவுண்டானா மயில் ரவுண்டானாESI JN -சிவகிரிப்பட்டி - இடும்பன் குளம் - கொடைக்கானல் Jn வழியாக சண்முகநதி என சுற்றி கொண்டு இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வரும் பக்தர்களை மலைக்கோவில் செல்ல ஏதுவாக கொடைக்கானல் ரோடு (ஆவின் பால்பண்ணை) பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டால் பக்தர்கள் No 1 Gate வழியாக மலைக்கோவில் செல்லும் வழியை அடைய இலகுவாக இருக்கும். மேற்படி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட பின்பு பேருந்துகள் APA கல்லூரி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து சேர வேண்டும். APA கல்லூரி தற்காலிக பேருந்து நிலையத்தில் இறங்கும் பக்தர்கள் ESI UN வழியாக No 2 Gate வந்து மலைக்கோவில் செல்லும் பாதையை அடையலாம்.
8. பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த பழனி 1.நீதிமன்ற கிழக்கு பக்கம் 2. நீதிமன்ற தெற்கு பக்கம் 3. RVS மஹால் எதிரில் 4.மயிலாடும்பாறை 5. RTO Office பழனி 6.LIC Office பழனி. 7. இடும்பன் குளம். 8. ஆவின் பால் பண்ணை எதிர்புறம் (கொடைக்கானல் ரோடு) 9. சித்திரை அபார்ட்மெண்ட். 10. நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 11. தேவஸ்தான பேருந்து நிலையம் 12. கோசாலை பேருந்து நிலையம் 13. தேவர் சிலை பின்புறம் ஆகிய இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
9. மயில்ரவுண்டானா வழியாக தேவர்சிலை மற்றும் பாலாஜி ரவுண்டானா செல்வதற்கும், வேல் ரவுண்டானா வழியாக திருஆவினன்குடி செல்வதற்கும் பக்தர்கள் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் ஆட்டோகளுக்கு தடை இல்லை.
10. மேலும் பக்தர்கள் தாங்கள் செல்லும் இடங்களை எளிதில் சென்றடைய கிரிவீதியை சுற்றி QR Code ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி QR Code -ஐ பயன்படுத்தி Google Map மூலமாக பக்தர்கள் தாங்கள் சென்றடையும் இடங்களுக்கு எளிதில் சென்றடையலாம்.
11. பக்தர்கள் தாங்கள் செல்லும் இடங்களை எளிதில் கண்டறிந்து செல்ல வசதியாக முக்கியமான சந்திப்புகளில் (YOU ARE HERE MAP) என ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேற்படி ப்ளக்ஸ் பேனரை பயன்படுத்தி தாங்கள் இருக்கும் இடங்களை அறிந்து தாங்கள் செல்லும் வழி கண்டறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மே ற்கண்ட அறிவுரைகளை முறையாக பின்பற்றி காவல்துறைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சார்பாக ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணை ஆசிரியர் ; N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சட்டமன்றத் தேர்தல் தேதி? புதிய தகவல் !
ஜனநாயகன்..! திடீர் ஒத்திவைப்பு..! விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்...!
தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை...! பெரும் பரபரப்பு...!
அதிமுக எம்.பி.க்கு சொந்தமான கல்வி நிறுவனம்..! ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மதுரையில் மணக்கும் பஸ் நிலையம்? உறக்கத்தில் மாநகராட்சி !