by satheesh on | 2026-01-24 09:02 AM
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் ; 23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த பழனி ராசாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (எ) முருகேசன் (44) என்பவரை பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சரவணகுமாரி அவர்கள், நீதிமன்ற முதல் நிலைக்காவலர் திருமதி.இலக்கியா அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் (23.01.2026) இன்று திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி முருகன் (எ) முருகேசன் என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!