by admin on | 2026-01-23 06:51 PM
தேனி மாவட்டம், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹாப்ரியா ,இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி எடுக்கப்பட்டது. தேசிய வாக்காளர் தினமான (25.01.2026) அன்றைய தினத்தை முன்னிட்டு தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கீழ்கண்ட உறுதி மொழி எடுக்கப்படுகிறது. ‘மக்களாட்சி மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்” என்றும் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!