by satheesh on | 2026-01-22 03:40 PM
நாட்றம்பள்ளி அருகே மீண்டும் சந்தனகூடு உரூஸ் திருவிழாவா, இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் அபாயம்.கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு :
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில் கடந்த 100ஆண்டுகளுக்கு மேலாக தர்கா அமைந்துள்ளது. அந்த தர்காவில் பல ஆண்டுகளாக கதீர் என்பவர் சந்தனகூடு உரூஸ் திருவிழா நடத்தி வந்த நிலையில் இந்த ஆண்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவிழா நடத்தி முடித்துள்ளனர். இதனையெடுத்து மேல் முஸ்லீம் பகுதியை சேர்ந்த சித்திக் என்பவர் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து வருகிற 25.01.2026அன்று தர்காவில் மீண்டும் சந்தனகூடு உரூஸ் திருவிழா நடைப்பெறும் என தெரிவித்து அதற்கான பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என கூறப்படுகிறது. இதனை அறிந்த கதீர் உள்ளிட்ட தர்கா நிர்வாகிகள் காலம், காலமாக நாங்கள் வருடம் ஒருமுறை சந்தனகூடு உரூஸ் திருவிழா நடத்தி வருகிறோம் என சித்திக் தரப்பினரை கேட்டு உள்ளனர். அப்போது அவர்கள் தர்காவிற்குள் நீங்கள் நுழைந்தால் ஒருவர் கூட உயிரோடு திரும்ப மாட்டீர்கள் என கொலை மிரட்டல் விடுத்து திட்டமிட்டப்படி வருகிறது 25.01.2026அன்று நடைப்பெறும் என கதீர் தரப்பினரை துரத்தி உள்ளனர். இதனால் சந்தன கூடு உரூஸ் திருவிழாவிற்கு தடை விதிக்க கோரியும், தங்கள் உயிருக்கு சித்திக் கூட்டாளிகளால் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க கோரியும், கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!