by satheesh on | 2026-01-21 11:27 AM
வத்தலகுண்டு-ல் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது :
திண்டுக்கல், வத்தலகுண்டுவில் பாமா மருத்துவமனை எதிரே உசிலம்பட்டி சாலையில் டாஸ்மாக் பார் அருகே கடந்த 16-ம் தேதி கண்ணாபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(37) என்பவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் தலைமையில் சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மலையப்பன்பட்டியை சேர்ந்த சுப்பன் மகன் பழனிவேல்(55), செக்காபட்டி சேர்ந்த முருகேசன் மகன் பாண்டிகண்ணன்(45) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் குடிபோதையில் கிருஷ்ணமூர்த்தியை தள்ளிவிட்டதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இணை ஆசிரியர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!