by admin on | 2026-01-17 01:09 PM
வத்தலகுண்டுவில் டாஸ்மாக் பார் அருகே ரத்த காயங்களுடன் 35 வயது வாலிபர் மர்ம மரணம் - கொலையா...???
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பாமா மருத்துவமனை எதிரே உசிலம்பட்டி சாலையில் டாஸ்மாக் பார் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் உடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் மேலும் வாலிபர் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை வத்தலகுண்டு போலீசார் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வத்தலகுண்டு போலீசார் இறந்த வாலிபர் யார்? கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!