by satheesh on | 2026-01-13 05:09 PM
தமிழக அரசு 16.01.2026 அன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் (பார்கள்) மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினங்களில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.
எனவே, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் / தனியார் மதுபான கூடங்கள் (பார்கள்) எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(ஏ), எப்.எல்-3(ஏஏ) மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் 16.01.2026 வெள்ளிக்கிழமை அன்று மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மேற்காணும் நாளில் விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக் கடை பணியாளர்கள் மற்றும் உரிமைதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!