by Vignesh Perumal on | 2026-01-13 01:05 PM
தமிழ் மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் மற்றும் சமூக மேம்பாட்டிற்கும் அரும்பணியாற்றி வரும் தமிழறிஞர்கள் மற்றும் சான்றோர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் இந்த உயரிய விருதுகளுக்கு, முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பேரறிஞர் அண்ணா விருது 2025, அமைச்சர் துரைமுருகன் தந்தை பெரியார் விருது, வழக்கறிஞர் அருள்மொழி அண்ணல் அம்பேத்கர் விருது 2025, சிந்தனைச்செல்வன் (விசிக எம்.எல்.ஏ) பெருந்தலைவர் காமராசர் விருது 2025, எஸ்.எம்.இதயத்துல்லா மகாகவி பாரதியார் விருது, கவிஞர் நெல்லை ஜெயந்தா பாவேந்தர் பாரதிதாசன் விருது, கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, வெ.இறையன்பு (முன்னாள் ஐ.ஏ.எஸ்) முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, முனைவர் செல்லப்பா முத்தமிழறிஞர் கலைஞர் விருது 2025 விடுதலை விரும்பி ஆகியோருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, இலக்கியம், திராவிட இயக்க வரலாறு, சமூக நீதி மற்றும் அரசியல் தளங்களில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இந்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தைப்பொங்கலை அடுத்த ஜனவரி 15 (திருவள்ளுவர் திருநாள்) அன்று சென்னையில் நடைபெறும் அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விருதுகளை நேரில் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
தமிழுக்கும் தமிழர் நலனுக்கும் பாடுபடும் ஆளுமைகளை அங்கீகரிக்கும் இந்த அறிவிப்பு, தமிழறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!