by satheesh on | 2026-01-09 08:16 PM
கன்னியாகுமரி: தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் வள்ளியாற்றில், கொல்லன்விளை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், மார்த்தாண்டம் சிராயன்குழியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இமானுவேல் படுகாயம் அடைந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். அதே வழியாக சென்ற குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, விபத்து செய்தி அறிந்ததும் உடனடியாக தனது காரிலேயே அவரை தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். 108 ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் துரிதமாக செயல்பட்ட ஆட்சியரின் மனிதாபிமான செயல் அங்கிருந்த மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றது.குமரி கலெக்டரின் மனிதாபிமானம் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆட்சியரின் அவசர உதவி நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!