by admin on | 2026-01-07 07:19 PM
தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr. B. சினேஹாப்ரியா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிளக்ஸ், பேனர் மற்றும் லித்தோ போஸ்ட் கடை உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில், பிளக்ஸ் மற்றும் பேனர் வைப்பதற்கான சட்ட விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், ஜாதி, மதம் மற்றும் அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் மற்றும் படங்களை அச்சிடுவது சட்டப்படி குற்றமாகும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.அத்துடன், இனிவரும் காலங்களில் விதிமுறைகளை மீறி பிளக்ஸ், பேனர் மற்றும் லித்தோ போஸ்ட் அச்சிடக் கூடாது என கடுமையாக அறிவுறுத்தப்பட்டது.விதிமுறைகளை மீறுவோர்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!