by satheesh on | 2026-01-06 12:56 PM
மதுரை; திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தீபம் ஏற்றலாம் என்பது உறுதியாகி உள்ளது. தீபம் ஏற்றலாம்: நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது நகைப்புக்குரியது. மாவட்ட நிர்வாகம் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் போதும் தீபம் ஏற்றலாம். தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது . திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம்.கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பது அர்த்தமற்றது.
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!
ஸ்கூல் பஸ்ஸில் போதை டிரைவர் - தப்பிய மாணவர்கள் ! தினமும் ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை !!