by admin on | 2025-12-24 08:49 PM
தேனி மாவட்டம் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஜமீன்தாரினி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் இன்று (24.12.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, விடுமுறை என்றாலே ஓய்வும் மகிழ்ச்சியும் நினைவிற்கு வரும். அந்த விடுமுறையை பயனுள்ள வகையில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் கற்றல் நேரமாக மாற்றும் அரிய வாய்ப்பாக இச்சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இச்சிறப்பு முகாம் மூலம் மாணவர்கள் தங்களின் சிந்தனைத் திறன்களையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளலாம். இம்முகாமில் ஓவியப்பயிற்சி, நடனப்பயிற்சி, மண்பாண்ட பயிற்சி, சிலம்பம், கராத்தே பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இன்றையப் போட்டி நிறைந்த உலகில், விடுமுறை காலமும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமான காலமாக மாறியுள்ளது. இந்த வகுப்புகள், மாணவர்களை மனதளவிலும் அறிவாற்றலிலும் தயார்படுத்தும். இதனை பள்ளி, மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் இம்முகாமில், ஆர்வத்துடன் கலந்து கொண்டு, மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறையை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் Dance - Folk / Classical (நாட்டுப்புற நடனம் மற்றும் பாரம்பரிய நடனம்), Pencil Drawing(ஓவியக்கலை பயிற்சி), Pottery Draft (மண்பாண்ட பயிற்சி), Singing (பாட்டுபயிற்சி), சிலம்பம் / கராத்தே பயிற்சி வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, அனைத்து மாணவர்களுக்கும் முதலில் யோகா பயிற்சி வழங்கப்பட்ட பின்னர், பிற பயிற்சிகள் வழங்கப்படுமம், இச்சிறப்பு முகாம் போடிநாயக்கனூர் ஜமீன்தாரினி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் இன்று (24.12.2025) முதல் 04.01.2026 வரை நடைபெற உள்ளது. மேலும், 29.12.2025 மற்றும் 30.12.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு தோட்டக்கலை பயிற்சி பெரியகுளம் தோட்டக்கலை மற்றும் ஆராஆராய்ச்சிக்கானலையத்திலும் மற்றும் பானை வனையும் இடமான வயல்பட்டி பகுதிக்கு மாணவர்களை நேரடியாக அழைத்து சென்று பயிற்சி வழங்கப்பட உள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற துவக்க நாள் முகாமில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி சியாமளாதேவி, வட்டாட்சியர் திரு.சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் (போடிநாயக்கனூர்) திரு.விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர், 9842337244.
திண்டுக்கல் - கோவை நெடுஞ்சாலையில் டோல்கேட் திறப்பு ! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு - திறப்பு நிறுத்திவைப்பு!
அதிரடி காட்டும் தேனி எஸ் பி....!!! பொது மக்களிடம் நல்ல வரவேற்பு...!!!
ஆசை வார்த்தை கூறி அழைத்த பெண் - பைனான்சியரை நிர்வாணமாக்கி மிரட்டல் ! இருவரை தட்டி தூக்கிய போலீஸ்:!!
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!