by admin on | 2025-12-18 11:48 AM
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று17.12.2025 கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. K. கோடீஸ்வரன், திரு. V. ரகுபதி மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த நவம்பர் மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. E. பாலகிருஷ்ணன் காவல் ஆய்வாளர்கள் திரு. அம்பேத்கார், திரு. சந்துரு, திரு. தர்மலிங்கம், திரு. பிரேம்குமார், திரு. பார்த்தசாரதி, திருமதி. பாரதி, திரு. சிவானந்தன், உதவி ஆய்வாளர்கள் திரு. குப்புசாமி, திரு. தவச்செல்வம், திருமதி. உத்திரமாள், திரு. நடராஜன், திரு. சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 55 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் எடிட்டர். 9842337244.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!