by Vignesh Perumal on | 2025-12-10 07:06 PM
சர்வதேச 'மனித உரிமைகள் தினம்' அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டக் காவல் துறையினரும், அமைச்சுப் பணியாளர்களும் இணைந்து "மனித உரிமைகள் நாள்" உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இன்று டிசம்பர் 10, 2025 (மனித உரிமைகள் தினம்) தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம். தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர். B. சினேகாப்ரியா, இ.கா.ப., அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், காவல் துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 'மனித உரிமைகள் நாள்' உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டுச் சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமாற உறுதிமொழிகிறேன்.
எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.
என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன்.
மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.
மாவட்டக் காவல் அலுவலகத்தில் இந்த உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றதோடு மட்டுமல்லாமல், தேனி மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் காவலர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து "மனித உரிமைகள் நாள்" உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மதிப்பது குறித்துக் காவல்துறையினரிடையே விழிப்புணர்வையும் கடமையுணர்வையும் ஏற்படுத்துவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!