by Vignesh Perumal on | 2025-12-10 11:10 AM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து போதை காளான் விற்பனை செய்ததாக ஒரு நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்த மணி (40) இவர் கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசாரால் கைது கைதுசெய்யப்பட்டு உள்ளார்.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை காளான் மற்றும் பிற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. இந்நிலையில், பாம்பார்புரம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படியாக போதை காளான்களை விற்பனை செய்ய முயன்ற மணி (40) என்பவரைப் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் போதை காளான் வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மணி என்பவரைக் கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த போதை காளானையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணி மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதை காளான் உட்கொள்வதும், விற்பனை செய்வதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதை விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!